இன்ஸ்டாகிராமில் 11 மில்லியனை தாண்டிய ரசிகர்கள் கூட்டம்: குஷியில் சமந்தா

இன்ஸ்டாகிராமில் 11 மில்லியனை தாண்டிய ரசிகர்கள் கூட்டம்: குஷியில் சமந்தா

இன்ஸ்டாகிராமில் 11 மில்லியனை தாண்டிய ரசிகர்கள் கூட்டம்: குஷியில் சமந்தா
Published on

 தமிழகத்தில் புறப்பட்டு ஆந்திரக் கரையோரம் ஒதுங்கிய அழகுப் புயல் சமந்தாவை  இன்ஸ்டாகிராமில் ஒரு கோடியே பத்து லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். பல்வேறு வகையான கேரக்டர்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்துள்ள அவர், தெலுங்கில் கடைசியாக நடித்த படம் தமிழின் 96 ரீமேக்கான ஜானு. தமிழில் த்ரிஷா நடித்த கதாபாத்திரத்தில் சமந்தா நடித்திருந்தார்.

இன்ஸ்டாகிராமில் சருமப் பாதுகாப்பு மற்றும் அவர் வளர்க்கும் செல்லப்பிராணிகள் பற்றி படங்களுடன் எழுதிவருவதை அவர் வழக்கமாக வைத்திருக்கிறார். அதற்கு ரசிகர்கள் அதிகம். அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே பத்து லட்சம் பேராக உயர்ந்துள்ளது. தன் பயணம் முழுவதும் தனக்கு ஆதரவு அளித்துவரும் ரசிகர்களுக்கு சமந்தா ஒரு வீடியோ மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.  

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com