ஸ்கிரீனில் நாகார்ஜுனா.. மேடையில் சமந்தா.. தெலுங்கு பிக்பாஸில் மாறிய தொகுப்பாளர்..!

ஸ்கிரீனில் நாகார்ஜுனா.. மேடையில் சமந்தா.. தெலுங்கு பிக்பாஸில் மாறிய தொகுப்பாளர்..!
ஸ்கிரீனில் நாகார்ஜுனா.. மேடையில் சமந்தா.. தெலுங்கு பிக்பாஸில் மாறிய தொகுப்பாளர்..!

தெலுங்கு பிக்பாஸின் புதிய தொகுப்பாளராக நடிகை சமந்தா மாறியுள்ளார்.

தெலுங்கில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் இந்நிகழ்ச்சியை நடிகை சமந்தா தொகுத்து வழங்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. அதனை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று வெளியான பிக்பாஸ் ப்ரோமோவில் நாகார்ஜுனாவிற்கு பதிலாக சமந்தா தோன்றினார். கலைஞர்களுடன் நடனமாடியபடி பிக்பாஸ் தளத்திற்கு வந்த சமந்தா, அச்சமயம் வீடியோ வழியாக இணைந்த நாகார்ஜுனாவை “ மாவ்யா” என்று அழைத்தார். சமந்தாவை பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் திரையில் நாகார்ஜுனா அறிமுகப்படுத்த போட்டியாளர்கள் சமந்தாவை பார்த்து ஆச்சரியப்பட்டனர். 

நாகார்ஜுனா மணாலியில் நடைபெற்று வரும் வைல்டு டாக் படத்தின் படப்படப்பில் பிஸியாக இருப்பதால் இந்த ஏற்பாடு எனச் சொல்லப்படுகிறது. சமந்தா தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com