பேய் படத்தில் வாய் பேசமுடியாதவராக நடிக்கும் சமந்தா..!

பேய் படத்தில் வாய் பேசமுடியாதவராக நடிக்கும் சமந்தா..!
பேய் படத்தில் வாய் பேசமுடியாதவராக நடிக்கும் சமந்தா..!

இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கும் பேய் படத்தில் நடிகை சமந்தா வாய் பேச முடியாதவராக நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் அஸ்வின் சரவணன் முதன் முதலில் நடிகை நயன்தாராவை வைத்து இயக்கிய ‘மாயா’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. அதனைத் தொடர்ந்து டாப்ஸியுடன் இணைந்து ’கேம் ஓவர்’ படத்தை இயக்கினார். அப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

தனது இரண்டு படங்களையும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக இயக்கியவர் மூன்றாவது படமும் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும்விதமாக சமந்தாவுடன் இணைந்தார். இப்படத்தின் படபிடிப்பு தொடங்கவிருந்த நேரத்தில் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன. இப்படத்தில், நடிகை சமந்தா வாய் பேச முடியாதவராக நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, அவர் சிறப்பு பயிற்சியும் எடுத்துகொண்டு வருகிறார். இதனால், இந்தத் திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திரைப்படம் திரைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. இப்படத்தில், நடிகர் பிரச்சன்னாவும் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com