திருமணத்துக்காக மூன்று மாதம் விடுப்பு எடுக்க இருப்பதாக நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் தெரிவித்துள்ளனர்.
சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து வந்தனர். இவர்கள் காதலுக்கு இரு வீட்டிலும் பச்சைக்கொடி காட்டியதை அடுத்து அக்டோபர் மாதம் திருமணம் நடக்க இருக்கிறது. இடம் முடிவாகவில்லை. இதுபற்றி நாக சைதன்யா, திருமணத்துக்காக நானும் சமந்தாவும் மூன்று மாதம் விடுமுறை எடுக்க இருக்கிறோம். அப்போது படப்பிடிப்பில் கலந்துகொள்ள மாட்டோம்’ என்று கூறியுள்ளார்.
’திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன், சினிமாவில் இருந்து வெளியேறும் எண்ணமில்லை’ என்று சமந்தா ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.