\
பாலியில் சமந்தா திருமணமா?

பாலியில் சமந்தா திருமணமா?

பாலியில் சமந்தா திருமணமா?
Published on: 

நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து வருகின்றனர். இவர்கள் திருமணம் உறுதியாகிவிட்ட நிலையில், தேதியும் மாதமும் உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் அக்டோபரில் திருமணம் நடத்தப்பட இருப்பதாக நாக சைதன்யா கூறியுள்ளார்.

‘எங்கள் திருமணம் அக்டோபரில் நடக்க இருக்கிறது. இரண்டு குடும்பத்தின் வழக்கப்படி திருமணம் நடக்கும். இன்னும் இடம் முடிவாகவில்லை. முழுவதும் முடிவான பிறகு மற்ற விஷயங்களைத் தெரிவிக்கிறோம்’ என்றார் நாக சைதன்யா.

இதற்கிடையே இவர்கள் திருமணம் ஏற்கனவே இந்தோனேஷியாவின் பாலி தீவில் நடந்து முடிந்து விட்டதாகவும் அதனால்தான் இருவரும் ஹைதராபாத்தில் ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com