நெசவாளர்கள் படும் துன்பத்தை பற்றிய ஆவணப்படத்தில் நடிக்க இருக்கிறார் சமந்தா.
கடந்த ஜனவரி மாதம் தெலங்கானா அரசின் கைத்தறி தயாரிப்புகளுக்கான தூதராக சமந்தா நியமிக்கப்பட்டார். பின்னர் அவரே கைத்தறி நிறுவனம் ஒன்றை சமீபத்தில் தொடங்கினார். இந்நிலையில், கைத்தறி நெசவாளர்கள் படும் துன்பத்தை பற்றி தூலம் சத்யநாராயணா இயக்க உள்ள ஆவணப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்தப் படத்தில் அவர் என்ன கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை. விஜய் உடன் மெர்சல், சிவகார்த்திகேயன் உடன் இணைந்து ஒரு படம் என தமிழ், தெலுங்கில் பிஸியாக உள்ள சமந்தா விரைவில் தனது காதலர் நாகசைதன்யாவை திருமணம் செய்ய இருக்கிறார்.