வைரலான நாக சைத்தன்யா - சாய் பல்லவி ‘ஏய் பில்லா’ பாடல் - பச்சைக் கொடி காட்டிய சமந்தா
நாக சைத்தன்யா சாய்ப்பல்லவி நடிப்பில் உருவாகியிருக்கும் லவ் ஸ்டோரி படத்திலிருந்து ‘ஏய் பில்லா’ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
நாக சைத்தன்யா முதன் முறையாக சாய் பல்லவியுடன் இணைந்து நடித்திருக்கும் படம் லவ் ஸ்டோரி. தற்போது இப்படத்திலிருந்து
‘ஏய் பில்லா’ என்ற காதல் பாடலின் ஒரு நிமிட வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டிருக்கிறது. முழுக்க முழுக்க காதலர்களுக்கு இடையே உள்ள உணர்வுகளை வெளிப்படுத்திருக்கும் இப்பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
காதலர் தின பரிசாக வெளியிடப்பட்டிருக்கும் இப்பாடலில் நாக சைத்தன்யா சாய்ப்பல்லவிக்கு இடையேயான கெமிஸ்டரி அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு இடையேயான காதல் காட்சிகளை மட்டும் வைத்து உருவாகியிருக்கும் இந்தப் பாடல் தற்போது நெட்டிசன்களால் அதிகமாக விரும்பபட்டுவருகிறது. குறிப்பாக பாடலில் வரும் முத்தக் காட்சியின் படங்களை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க பாடலை நடிகையும் நாக சைத்தன்யாவின் காதல் மனைவியுமான சமந்தாவும் வரவேற்றுள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த பாடலை பகிர்ந்து கொண்டார்.