\
ஆட்டோ ஓட்டி குடும்பத்தை காப்பாற்றும் ஏழை பெண்! - கார் பரிசளித்து உதவிய நடிகை சமந்தா!

ஆட்டோ ஓட்டி குடும்பத்தை காப்பாற்றும் ஏழை பெண்! - கார் பரிசளித்து உதவிய நடிகை சமந்தா!

ஆட்டோ ஓட்டி குடும்பத்தை காப்பாற்றும் ஏழை பெண்! - கார் பரிசளித்து உதவிய நடிகை சமந்தா!
Published on

ஆட்டோ ஓட்டி தனது ஏழு சகோதரிகளை காப்பாற்றி வரும் பெண் ஆட்டோ டிரைவருக்கு நடிகை சமந்தா கார் ஒன்றை பரிசாக அளித்து நெகிழ்ச்சியூட்டிய சம்பவம் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

தற்போது, தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வரும் சமந்தா சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கவிதா என்ற பெண்ணும் கலந்து கொண்டார். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட கவிதா, தனது பெற்றோர்கள் இறந்துவிட்டதால் தனது ஏழு சகோதரிகளை காப்பாற்றி வருவதாகவும், குடும்ப வறுமையை போக்க ஆட்டோ ஓட்டி வருவதாகவும் உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

கவிதாவின் வறுமை நிலையை அறிந்து உதவ நினைத்த நடிகை சமந்தா, கார் டிராவல்ஸ் ஆரம்பித்து இன்னும் உயர கார் ஒன்றை பரிசாக அளிப்பதாக அந்நிகழ்ச்சியில் கவிதாவுக்கு உறுதியளித்திருந்தார். அவர், சொன்னபடியே கவிதாவுக்கு தற்போது 12.5 லட்சம் மதிப்புள்ள காரை பரிசளித்து நெகிழ வைத்திருக்கிறார். சமந்தாவின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com