நடிகை சமந்தா - நாக சைதன்யா திருமண வரவேற்பு: ஐதராபாத்தில் பிரமாண்டம்!
நடிகர் நாகை சைதன்யா- சமந்தா திருமண வரவேற்பு விழா ஐதராபாத்தில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.
பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவும், சமந்தாவும் காதலித்து வந்தனர். இரு வீட்டாரும் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியதை அடுத்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். ஐதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
திருமணம் அக்டோபர் 6 மற்றும் 7ம் தேதிகளில் கோவாவில் நடந்தது. இதில் இரண்டு குடும்பத்தினருக்கும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். திருமணம் முடிந்ததுமே இருவருமே தங்கள் படங்களில் நடிப்பதில் பிசியாகிவிட்டனர்.
இதையடுத்து இவர்கள் திருமண வரவேற்பு விழா ஐதராபாத்தில் நேற்று நடந்தது. நாகார்ஜுனாவுக்கு சொந்தமான என்.கன்வென்சன் மையத்தில் இந்த விழாவில் நடிகர்கள் சிரஞ்சீவி, வெங்கடேஷ், ராணா, ராம்சரண், இயக்குனர் ராஜமவுலி உட்பட ஏராளமான தெலுங்கு திரையுலகினர் கலந்துகொண்டனர். இயக்குனர் அட்லி, நடிகர் பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்ட சில தமிழ் திரையுலகினரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

