சினிமா
ட்ரெண்ட் ஆகும் சல்மான்கான் சிறிய வயது புகைப்படம்
ட்ரெண்ட் ஆகும் சல்மான்கான் சிறிய வயது புகைப்படம்
சல்மான்கான் சிறிய வயது புகைப்படம் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதையொட்டி பலரும் தங்களது பழைய படங்களை தூசி தட்டி வெளியிட ஆரம்பித்துள்ளனர்.
ட்விட்டரில் தனது சிறிய வயது புகைப்படத்தை சல்மான்கான் வெளியிட்டிருந்தார். மாணவ பருவத்தில் எடுக்கப்பட்ட அந்தப் படத்தை வெளியிட்டுவிட்டு அவர் கிண்டலாக ‘சில வருடங்களுக்கு முன்பு’ என்று குறிப்பிட்டிருந்தார். அவர் அப்படத்தை வெளியிட்டு சில நிமிடங்களில் 800 ரீ ட்விட் செய்யப்பட்டுள்ளது. 4.500 லைக்ஸை அள்ளியுள்ளது. சல்மானின் சிறு வயது படத்தை போலவே பலரும் தங்களின் சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள். திரை பிரபலங்கள் மத்தியில் தொடங்கி இந்த பழக்கம் ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் இடையே ட்ரெண்ட்டாக வலம் வர தொடங்கியுள்ளது. ஆளாளுக்கு எல்லோரும் தங்களின் சிறு வயது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.