குதிரையேறிய சல்மான் கான்..! (வீடியோ)

குதிரையேறிய சல்மான் கான்..! (வீடியோ)
குதிரையேறிய சல்மான் கான்..! (வீடியோ)


பாலிவுட்டின் உச்ச நட்சத்திரம் சல்மான் கான், தீவிர குதிரையேற்ற பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் டியூப்லைட் திரைப்படத்திற்கு பிறகு நடித்துவரும் படம் ‘டைகர் ஜிந்தா ஹை’. இந்தபடத்தில் குதிரையில் பயணிக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் அதிக அளவில் இடம்பெற உள்ளதாக படத்தின் இயக்குநர் அலி அப்பாஸ் ஜாபர் தெரிவித்துள்ளார். அதனால் குதிரை பயிற்சிக்காக சிறப்பான பயிற்சியாளர்கள் வரவழைக்கப்பட்டு சல்மான் கானுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சல்மான் கான் குதிரை ஏற்றப் பயிற்சி பெறும் 14 விநாடி வீடியோவை டிவிட்டரில் இயக்குநர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் அதிக

ஈடுபாடுடன் நடிக்கும் நடிகர் சல்மான் கான் தற்போது குதிரை பயிற்சி எடுத்துவருவது அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. ஆஸ்திரியா, ஐக்கிய அரபு குடியரசில் படப்படிப்பு முடிந்த நிலையில், தற்போது மொராக்கோவில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

நடிகர் வருண் தவான் நடிப்பில் செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியாக இருக்கும் ஜூட்வா-2 படத்தின் போது, ‘டைகர் ஜிந்தா ஹை’ படத்தின் டீஸர் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் ஜூட்வா-2 படத்தில் ஒரு சிறிய ரோலில் சல்மான் கான் நடித்துள்ளார் என்பதே. சல்மான்கானின் மாபெரும் வெற்றிப்படமான சுல்தான் படத்தை இயக்கிய அலி அப்பாஸ் ஜாபருடன் மீண்டும் அவர் கைகோர்த்துள்ளார் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com