சல்மான் கான்
சல்மான் கான்முகநூல்

’காரை வெடிகுண்டு வைத்து வெடிக்க செய்வேன்‘... சல்மானுக்கு மீண்டும் வந்த கொலை மிரட்டல்!

பாலிவுட் நடிகரான சல்மான்கானுக்கு மீண்டும் மீண்டும் கொலை மிரட்டல் வந்திருப்பது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
Published on

மீண்டும் மீண்டும் கொலை மிரட்டலில் சிக்கும் நடிகர் சல்மான்கான்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே இரண்டு பேர் துப்பாக்கி சூடு நடத்தியதிலிருந்து இந்த கொலை முயற்சி தொடங்கியது. பின்னர், பாபா சித்திக் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, சல்மான்கானை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது அவருக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அதிர்ச்சிகர தகவல் மும்பை வொர்லியில் உள்ள போக்குவரத்துத் துறையின் வாட்ஸ் அப் எண்ணுக்கு வந்துள்ளது. அதில், சல்மான் கானை வீடு புகுந்து கொலை செய்யப்போவதாகவும், அவரது காரை வெடிக்க செய்யப்போவதாகவும் மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதற்கு காரணம் என்ன?

பிஷ்னோய் மக்களின் குருவான 16 ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த ஜம்புகேஸ்வரரின் மறுவடிவமாக பிளாக்பக் மான்கள் கருதப்பட்டு வருகிறது. 1998 ஆம் ஆண்டில் ராஜஸ்தானில் படப்பிடிப்புக்கு சென்றிருந்த சல்மான் கான், பிளாக்பக் மான்களை வேட்டையாடியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்கு பதியப்பட்டநிலையில், வழக்கில் நீதிமன்றத்தை நாடி ஜாமீன் பெற்றிருந்தார் சல்மான் கான். இந்த நிலையில், பிஷ்னோய் சமூகத்தைச் சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல், சல்மான் கானை கொலை செய்வதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.

சல்மான் கான்
உடல்மெலிந்து காணப்படும் மாநகரம் நடிகர் ஸ்ரீ! என்னாச்சு அவருக்கு?

பலமுறை வெளிப்படையாக கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதனிடையே, மத்திய அரசு தரப்பில் சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது மீண்டும் கொலை மிரட்டல் வந்திருப்பது பிஷ்னோய் கும்பலிடமிருந்து வந்ததா? என்று தெளிவாக தெரியவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com