போர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் சல்மானுக்கு முதலிடம்: நயன்தாராவும் இடம்பிடித்தார்!

போர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் சல்மானுக்கு முதலிடம்: நயன்தாராவும் இடம்பிடித்தார்!
போர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் சல்மானுக்கு முதலிடம்: நயன்தாராவும் இடம்பிடித்தார்!

2018 ஆம் ஆண்டு அதிக வருமானம் ஈட்டிய இந்திய பிரபலங்களின் பட்டியலில் இந்தி நடிகர் சல்மான் கான் முதலிடம் பிடித்துள்ளார்.

அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை ஒவ்வொரு வருடமும் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. 2018ம் ஆண்டுக்கான நூறு பேர் கொண்ட பட்டியலை இப்போது வெளியிட்டுள்ளது. இதில் பிரபல இந்தி நடிகர் சல்மான் கான், முதலிடம் பிடித்துள்ளார். அவர் இந்த ஆண்டு 253.35 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார். அவர் நடித்த டைகர் ஜிந்தா ஹே, ரேஸ் 3 படங்கள் ஹிட்டானதை அடுத்தும் விளம்பர படங்கள் மூலமும் அவர் இத்தனை கோடியை சம்பாதித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அவர் 228.09 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார். ’2.ஓ’ படத்தில் நடித்துள்ள இந்தி நடிகர் அக்‌ஷய்குமார், மூன்றாவது இடத்தில் உள்ளார். அவர் 185 கோடி சம்பாதித்துள்ளார்.
ஷாரூக்கானுக்கு இந்த ஆண்டு எந்த படமும் ரிலீஸ் ஆகாததால், அவர் முதல் 10 இடங்களுக்குள் வரவில்லை. அவர் கடந்த ஆண்டு இரண்டாவது இடத்தில் இருந்தார். 
டாப்-10 பட்டியலில் அமீர் கான், அமிதாப், ரன்வீர் சிங், சச்சின், அஜய் தேவ்கன் உள்ளனர். 

முதன்முறையாக டாப்-5 இடத்தைக் கைப்பற்றிய முதல் நடிகை என்ற பெருமையை நடிகை நடிகை தீபிகா படுகோன் பெற்றுள்ளார். நடிகைகள் ஆலியா பட், அனுஷ்கா சர்மா, டாப்ஸி மற்றும் பேட்மின்டன் வீராங்கனை சிந்து ஆகியோரும் டாப் 100 பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இந்த லிஸ்டில் தென்னிந்திய சினிமாவில் இருந்து நடிகை நயன்தாரா மட்டுமே இடம் பிடித்துள்ளார். அவர் ரூ. 15.17 கோடி வருமானத்துடன் 69-வது இடத்தில் இருக்கிறார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com