சினிமா
நடிகன்யா: படம் ஓடாததால் ரூ.55 கோடியை திருப்பிக் கொடுக்கிறார் சல்மான்!
நடிகன்யா: படம் ஓடாததால் ரூ.55 கோடியை திருப்பிக் கொடுக்கிறார் சல்மான்!
தான் தயாரித்து ஹீரோவாக நடித்தப் படம் ஓடாததால் ஏற்பட்ட நஷ்டத்தை சரிகட்ட சல்மான் கான் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இந்தி சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் சல்மான் கான். சமீபத்தில் அவர் நடித்த எல்லா படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். ஆனால், கடந்த மாதம் 23 ம் தேதி ரிலீஸ் ஆன ’டியூப்லைட்’ சரியாக ஓடவில்லை. ஷோகைல் கான், இஷா தல்வார், ஓம் புரி உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை கபிர் கான் இயக்கியிருந்தார். சல்மான் கான் சொந்தமாக தயாரித்திருந்த இந்தப் படம் பலத்த நஷ்டத்தை சந்தித்தது. இதனால் படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் பணத்தைத் திருப்பித் தருமாறு சல்மான் கானிடம் கேட்டனர். அதற்கு சல்மான் கான் ஒப்புக்கொண்டுள்ளார். ரூ.55 கோடியை திருப்பித் தருவதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.