அதிகம் சம்பளம் வாங்கும் பிரபலங்கள் பட்டியலில் சல்மான், அக்‌ஷய் !

அதிகம் சம்பளம் வாங்கும் பிரபலங்கள் பட்டியலில் சல்மான், அக்‌ஷய் !

அதிகம் சம்பளம் வாங்கும் பிரபலங்கள் பட்டியலில் சல்மான், அக்‌ஷய் !
Published on

அதிகம் சம்பளம் வாங்கும் பிரபலங்கள் பட்டியலில் இந்தி நடிகர்கள் சல்மான் கான், அக்‌ஷய் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். வழக்க மாக இந்தப் பட்டியலில் இடம்பெறும் ஷாரூக் கான் இந்த வருடம் இடம்பெறவில்லை.

உலகில் அதிக வருமானம் ஈட்டும் பிரபலங்கள் பற்றிய பட்டியலை அமெரிக்காவின் பிரபல போர்ப்ஸ் இதழ் வெளியிடுவது வழக்கம். இதில் நூறு பேர் இடம்பெறுவார்கள் இந்த வருடம் வெளியிட்டுள்ள பட்டியலில் இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் 76 வது இடத்தில் உள்ளார். அவர் 40.1 மில்லியன் டாலரை இந்த வருடம் சம்பாதித்துள்ளார். சமூக அக்கறையுள்ள படங்களில் நடிக்கும் அவர், சமீபத்தில் நடித்து வெளியான ’டாய்லெட்’ , ’பட்மன்’ ஆகிய படங்கள் மற்றும் சுமார் 20 விளம்பர படங்களில் நடித்ததன் மூலம் இந்த வருமானத்தை அவர் ஈட்டியுள்ளதாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த லிஸ்டில் சல்மான் கான் 82 -வது இடத்தில் உள்ளார். அவர் 37.7 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டியுள்ளார். இந்த லிஸ்டில் கடந்த வருடம் 65 வது இடத்தில் இருந்த ஷாரூக் கான் இந்த வருடம் 100 இடங்களுக்குள் வரவில்லை.

285 மில்லியன் டாலர் வருமானத்துடன் அமெரிக்க பாக்ஸர் பிளாய்ட் மேவெதர் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில், பிரபல ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குளூனி 239 மில்லியன் டாலர் வருமானத்துடனும்  டிவி நடிகர் கெயில் ஜென்னர் மூன்றாவது இடத்திலும் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்சி, பாப் ஸ்டார் கேட்டி பெர்ரி, டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர், பாடகர் பியான்ஸ் உட்பட பலர் இந்த லிஸ்டில் இடம்பெற்றுள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com