இந்தியில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சல்மான் கான். பல்வேறு நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட சல்மான் கான், இப்போது ரொமானிய நடிகை லுலியாவை காதலிப்பதாகக் கூறப்படுகிறது. இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாயின. இந்நிலையில் லுலியாவுக்கு சல்மான் கான் வீடு பார்த்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதுபற்றி வீடு புரோக்கர் ஒருவர் கூறும்போது, ’சல்மான்கான் வீடுகளில் முதலீடு செய்து வருவது உண்மைதான். கூடவே லுலியாவுக்கும் பிளாட் தேடி வருகிறார். இதற்காக, 25-30 கோடி பட்ஜெட் ஒதுக்கி இருக்கிறார்’ என்றார். தனது வீட்டுக்கு அருகிலேயே தேடிவருவதால் கிடைப்பதில் சிக்கல் என்று கூறி வருகின்றனர்.
’சல்மானின் குடும்ப நண்பராகி விட்டார் லுலியா. சல்மானின் சகோதரிகள் அர்பிதா, அல்விராவுக்கு நெருங்கிய தோழியாகிவிட்டார் லுலியா. அதனால்தான் சல்மான் இவ்வளவு அக்கறையாக அவருக்கு வீடு தேடி வருகிறார்’ என்று அவருக்கு வேண்டியவர்கள் கூறுகின்றனர்.