\
மா‌ன் வேட்டை வழக்கில் நான் அப்பாவி: சல்மான்கான்

மா‌ன் வேட்டை வழக்கில் நான் அப்பாவி: சல்மான்கான்

மா‌ன் வேட்டை வழக்கில் நான் அப்பாவி: சல்மான்கான்
Published on

மான் வேட்டை வழக்கில் தம்மை வேண்டுமென்றே சிக்கவைத்துள்ளனர் என்றும், தாம் எந்த தவறும் செய்யவில்லை என்று நடிகர் சல்மான்கான் ஜோத்பூர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மான் வேட்டை வழக்கில், நடிகர் சல்மான்கான், சைஃப் அலி கான், நடிகை தபு உள்ளிட்டோர் ஜோத்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். மான் வேட்டை தொடர்பாக சல்மான்கானிடம் நீதிபதி 68 கேள்விகள் கேட்டுள்ளார், அதற்கு அவர் அளித்த பதிலில் தாம் குற்றமற்றவர் என்றும், மான் வேட்டை தொடர்பாக தம் மீது பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் ஹம் சாத் சாத் ஹை படப்பிடிப்பிற்கு பிறகு சக நடிகர்களுடன் மான்வேட்டைக்குச் செல்லவில்லை என்றும் ஹோட்டல் அறைக்கு திரும்பியதாகவும் சல்மான்கான் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதே போல் அப்படத்தில் நடித்த நடிகர்கள் சைஃப் அலி கான், தபு, சோனாலி, நீலம் ஆகியோரும் தங்களின் வாக்குமூலத்தை அளித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com