பிரசாந்த் நீல், பிரபாஸ் கூட்டணியில் உருவாகும் ‘சலார்’ படத்தின் முக்கிய அப்டேட்

பிரசாந்த் நீல், பிரபாஸ் கூட்டணியில் உருவாகும் ‘சலார்’ படத்தின் முக்கிய அப்டேட்
பிரசாந்த் நீல், பிரபாஸ் கூட்டணியில் உருவாகும் ‘சலார்’ படத்தின் முக்கிய அப்டேட்

நடிகர் பிரபாஸ் - இயக்குநர் பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகி வரும் ‘சலார்’ படத்தின் முக்கிய அப்டேட் குறித்து படக்குழு தகவல் தெரிவித்துள்ளது.

எஸ்.எஸ். ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ படத்தின் மூலம், உலகம் முழுவதும் பிரபலமானவர், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ். இதேபோல் கன்னட திரையுலகைச் சேர்ந்த இயக்குநரான பிரசாந்த் நீல் ‘கே.ஜி.எஃப்.’ படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநராக மாறினார். இவர்கள் இருவரின் கூட்டணியில் தற்போது தயாராகி வரும் படம் ‘சலார்’.

‘கே.ஜி.எஃப்.’ படத்தை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ்தான் இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். மேலும் ஈஸ்வரி ராவ், ஜகபதி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். பிரித்விராஜ் சுகுமாறன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. புவன் கௌடா ஒளிப்பதிவு பணியை மேற்கொண்டு வருகிறார். ரவி பஸ்ரூர் இசைமையக்கிறார்.

200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் பூஜை, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி போடப்பட்டு படப்பிடிப்பு துவங்கியது. இதையடுத்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தநிலையில், இந்தாண்டு ஏப்ரலில் படத்தை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு கொரோனா 2-வது அலை காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

அதன்பிறகு மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்பட்டநிலையில், இந்த வருடம் மே மாதம் படத்தின் டீசர் வெளியாகலாம் என தகவல்கள் வெளியானது. ஆனால் அப்போதும் எந்த அப்டேட்டும் வெளியாகதால், பிரபாஸின் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில், ‘சலார்’ படத்தின் முக்கிய அப்டேட் குறித்து படக்குழு தகவல் தெரிவித்துள்ளது.

இந்தப் படத்தை தயாரித்து வரும் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி மதியம் 12.58 மணிக்கு புதிய அறிவிப்பு வெளியிட உள்ளதாக போஸ்டர் ஒன்றுடன் அறிவித்துள்ளது. இதனால் பிரபாஸின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com