\
சாய்னா நேவாலின் ‘சாய்னா’ பயோ பிக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சாய்னா நேவாலின் ‘சாய்னா’ பயோ பிக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சாய்னா நேவாலின் ‘சாய்னா’ பயோ பிக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Published on

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘சாய்னா’ பயோபிக் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சாய்னா நேவால் இந்தியாவிற்காக பேட்மிண்டன் விளையாட்டில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றவர். இந்தியாவில் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களில் சாய்னா நேவால் குறிப்பிடத்தகுந்தவர்.

தோனி, மேரி கோம் உள்ளிட்ட விளையாட்டு வீரார்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் எடுக்கப்பட்டு வரவேற்பை பெற்ற நிலையில், அமேல் குப்தா இயக்கத்தில் சாய்னா நேவால் வாழ்க்கை வரலாற்றுப் படம் எடுக்கப்படுவதாக கடந்த 2019 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியானது.

இதில், சாய்னா நேவாலாக இறகுப் பந்தை சுழற்றி அடித்து நடித்துள்ளார் பிரனிதி சோப்ரா. இப்படம், வரும் மார்ச் 26 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது என்று அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கிறது படக்குழு.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com