கிராமத்து குழந்தைகளுக்கு மெஹந்தி :  வைரலான சாய் பல்லவி புகைப்படங்கள்.. பாராட்டிய சமந்தா!

கிராமத்து குழந்தைகளுக்கு மெஹந்தி : வைரலான சாய் பல்லவி புகைப்படங்கள்.. பாராட்டிய சமந்தா!

கிராமத்து குழந்தைகளுக்கு மெஹந்தி : வைரலான சாய் பல்லவி புகைப்படங்கள்.. பாராட்டிய சமந்தா!
Published on

நடிகை சாய் பல்லவி ஷூட்டிங் சென்ற இடத்தில் கிராமத்துக் குழந்தைகளுக்கு மெஹந்தி வைத்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

 
 
 
View this post on Instagram

Happy Clients♥️Pipri Pillas♥️

A post shared by Sai Pallavi (@saipallavi.senthamarai) on

தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் முன்னணி நடிகையான சாய் பல்லவி தற்போது லவ் ஸ்டோரி படப்பிடிப்புக்காக உத்திரபிரதேசத்தில் உள்ளார். ஷூட்டிங் இடைவேளையில் அங்குள்ளக் கிராமத்து குழந்தைகளுக்கு கைகளில் மெஹந்தி வைத்து அழகு பார்த்துள்ளார்.

அந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ’மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள்’ என்று பூரிப்புடன் பகிர்ந்துள்ளார்.

 சாய் பல்லவி மலையாளத்தில் ‘பிரேமம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். பல மொழிகளில் நடித்தாலும் அவர், நம் ஊட்டியைச் சேர்ந்த தமிழ் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் குழந்தைகளின் கைகளில் மெஹந்தி இடும் புகைப்படங்களை நடிகை சமந்தாவும், அனுபமா பரமேஸ்வரனும் பாராட்டியுள்ளார்கள்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com