\
சாய் பல்லவியின் ‘கரு’ வெளியாகும் தேதி அறிவிப்பு

சாய் பல்லவியின் ‘கரு’ வெளியாகும் தேதி அறிவிப்பு

சாய் பல்லவியின் ‘கரு’ வெளியாகும் தேதி அறிவிப்பு
Published on

சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள ‘கரு’ திரைப்படம் வெளியாகும் தேதி அதிகாரப்பூவமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையானத்தில் ‘பிரேமம்’ மூலம் சினிமா உலகத்திற்கு அறிமுகமானவர் சாய் பல்லவி. அவரது மலர் டீச்சர் கதாப்பாத்திரம் மாநிலம் தாண்டி அவருக்கு மரியாதையை உருவாக்கிக் கொடுத்தது. ஆகவே அவரை தமிழில் எப்படியாவது நடிக்க வைக்க வேண்டும் என போட்டி நிலவியது. ஆனால் அவர் டாக்டர் படிப்பில் மும்முரமாக இருந்ததால் மறுப்பு தெரிவித்து வந்தார். 

இந்நிலையில் ‘கரு’ படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருந்தார். இந்தப் படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் எடுக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு செய்தி வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் நாக செளரியா, ஆர்.ஜே.பாலாஜி, சந்தான பாரதி, ரேகா, நிழல்கள் ரவி, ஸ்டண்ட் சில்வா என பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, நிரவ்ஷா செய்துள்ளார். சாம் சி.எஸ். இதற்கு இசையமைத்துள்ளார்.


 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com