சினிமா
சுந்தரத் தெலுங்கில் ‘மலர் டீச்சர்’: வைரலாகும் சாய்பல்லவி வீடியோ
சுந்தரத் தெலுங்கில் ‘மலர் டீச்சர்’: வைரலாகும் சாய்பல்லவி வீடியோ
மலர் டீச்சராக எல்லோர் மனதிலும் இடம்பிடித்த சாய்பல்லவி, தனது முதல் தெலுங்கு படமான ஃபிடா’வுக்காக டப்பிங் செய்யும் வீடியோ இப்போது வைரலாகப் பரவி வருகிறது.
பிரேமம் கதாநாயகி சாய்பல்லவி, தமிழ், தெலுங்கு மொழிகளில் தற்போது நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்துள்ள தெலுங்கு திரைப்படம் ஃபிடா. சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் தெலுங்கு தெரியாத சாய்பல்லவி டப்பிங் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஃபிடா படத்தில் வருண் தேஜ், சாய்பல்லவிக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கலக்கிவருகிறது.