என்னது? சாய் பல்லவி பாடலை 15 கோடி பேர் பாத்திருக்கிறார்களா?
இதுவரை சாய் பல்லவி பாடல் ஒன்றை சமூக வலைத்தளத்தில் 15 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளதாக அதன் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.
சாய் பல்லவியும் வருண் தேஜும் சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஃபிடா’. இதனை சேகர் கம்முலா இயக்கி இருக்கி இருந்தார். இது கடந்த ஆண்டு வெளியானது. இந்த இயக்குநர் இயக்கும் பல படங்கள் தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. இவர் இயக்கிய ‘அநாமிகா’ கூட தமிழில் ஏற்கெனவே வெளியாகி உள்ளது. தெலுங்கில் இவரது ‘லீடர்’ மாபெரும் ஹிட் ஆனது. ‘ஆனந்த்’ படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதினை பெற்றவர் கம்முலா.
இந்நிலையில் ‘ஃபிடா’ படத்திற்கான ‘வசிண்டே’ பாடல் சமூக வலைத்தளமான யுடியூப்பில் வெளியாகி இருந்தது. இந்தப் பாடலில் இடம்பெற்ற சாய் பல்லவியின் ஆட்டம் மிகவும் ரசிக்கக்கூடியதாக இருந்தது. இந்தப் பாடலை இதுவரை 150 மில்லியன் ரசிகர்கள் கண்டு ரசித்துள்ளனர். தென் இந்திய படங்களில் இதுவரை வெளியான எந்தப் படத்தின் பாடலும் இந்த அளவுக்கான அமோக ஆதரவை பெற்றதில்லை. அதாவது 15 கோடி ரசிகர்கள் ஒரே பாடலை பார்த்துள்ளது இதுவே முதல் தடவை. இந்தப் பாடலை மதுப்ரியா மற்றும் ராம்கி பாடியுள்ளனர். இதற்கு ஷக்திகாந்தி கார்த்திக் இசையமைந்துள்ளார். பாடல் வரிகளை சுத்தால அசோக் தேஜ் எழுதியிருந்தார். இந்தப் படத்தில் சாய் பல்லவிதான் முக்கிய கதாப்பாத்திரம். 13 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் 90 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆஃபிசில் ஹிட் ஆனது.
‘ஃபிடா’ ஒரு காதல் கதையை மையமாக வைத்து உருவான திரைப்படம். வெளிநாட்டுவாழ் பெண் ஒருவர் தெலுங்கானா வந்து வசிக்கிறார். சாய் பல்லவி ‘தெலுங்கானா பெண்ணாக’ இதில் வாழ்ந்திருந்ததால் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இந்நிலையிதான் இந்தப் பாடல் 15 கோடி ரசிகர்களை இதுவரை ஈர்த்துள்ளது.
சாய் பல்லவி, தமிழிலும் இப்போது பிசியாக நடித்து வருகிறார். தனுஷ் ‘மாரி2’, சூர்யா ‘என்ஜிகே’ எனப் பல படங்களில் அவர் நடித்து வருகிறார். தெலுங்கில் ‘போடி போடி லேசே மனசு’ விலும் நடித்து வருகிறார்.