தெலுங்கில் ஃபிடா படத்தில் பானுமதி கேரக்டரில் நடித்த சாய்பல்லவியை டோலிவுட் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதுவரை 40 கோடி ரூபாய் வசூலை எட்டியிருக்கிறது ஃபிடா. இத்தனைக்கும் சாய்பல்லவி நடித்த முதல் தெலுங்கு படம் இது.
இதனையடுத்து சாய்பல்லவி வீட்டை நோக்கி படையெடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள் தெலுங்கு படைப்பாளிகள். இதனைத் தொடர்ந்து இதுவரை 40 லட்ச ருபாய் வரை சம்பளம் பெற்று வந்த அவர், தற்போது சம்பளத்தை 70 லட்ச ரூபாயாக உயர்த்தி இருக்கிறார். இருப்பினும் பிரபல தயாரிப்பாளர்களும், புதிய தயாரிப்பாளர்களும் சாய்பல்லவியை நாடி வருகின்றனர். இந்நிலையில் தான் நடிக்கும் படங்களில் பிண்ணனி பாடவும் முடிவெடுத்து இருக்கிறாராம். அவர் தெலுங்கில் நானியுடன் தற்போது எம்சிஏ படத்தில் நடித்து வருகிறார். தமிழ்ப்பெண்ணான சாய்பல்லவி மலையாளத்தில் பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து புகழ்பெற்றவர்.