\
படப்பிடிப்பில் விபத்து: பீர் பாட்டில் குத்தி சாய் தன்ஷிகா காயம்!

படப்பிடிப்பில் விபத்து: பீர் பாட்டில் குத்தி சாய் தன்ஷிகா காயம்!

படப்பிடிப்பில் விபத்து: பீர் பாட்டில் குத்தி சாய் தன்ஷிகா காயம்!
Published on

படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் பீர் பாட்டில் குத்தியதில் நடிகை சாய் தன்ஷிகா காயமடைந்தார். 

சாய் தன்ஷிகா தற்போது நடித்துவரும் படம், ’யோகி டா’. ’கபாலி’ படத்தில் அவர் நடித்திருந்த யோகி கேரக்டரை கொண்டு இந்த தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தன்ஷிகா தவிர, கபீர் சிங், சாயாஜி ஷிண்டே, மனோபாலா உட்பட பலர் நடிக்கின்றனர். கவுதம் கிருஷ்ணா இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் கோயம்புத்தூரில் நடந்துவருகிறது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள, இந்தப் படத்தில் சாய் தன்ஷிகாவுக்கு ஆக்‌ஷன் காட்சிகளும் உள்ளன. 

படத்துக்கான சண்டைக்காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டன. நைட் கிளப் ஒன்றில் மறைந்திருக்கும் ரவுடிகளை தன்ஷிகா அடித்து பிடிப்பது போல காட்சி. இதற்காக பீர் பாட்டில்கள் உட்பட மது கூட செட் அமைக்கப்பட்டிருந்தது. டூப் போட்டுக் கொள்ளலாம் என்று இயக்குனர் சொன்னார்.

வேண்டாம் என்று மறுத்து தானே நடிப்பதாக, தன்ஷிகா சொன்னார்.இதையடுத்து ஒத்திகை பார்க்கப்பட்டது. பின்னர் காட்சி ஷூட் செய்யப்பட்டபோது டைமிங் மிஸ் ஆனதால், தன்ஷிகாவின் இடது கண்ணுக்கு கீழே பீர் பாட்டில் குத்தியது.

ரத்தம் கொட்டியதை அடுத்து, உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் காரணமாக அன்று படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com