\
பாலியல் தொழிலாளியாக நடிக்க ஹீரோயின்கள் மறுப்பு: இயக்குனர் புகார்

பாலியல் தொழிலாளியாக நடிக்க ஹீரோயின்கள் மறுப்பு: இயக்குனர் புகார்

பாலியல் தொழிலாளியாக நடிக்க ஹீரோயின்கள் மறுப்பு: இயக்குனர் புகார்
Published on

பாலியல் தொழிலாளியாக நடிக்க முன்னணி நடிகைகள் தயங்குவதாக ’டார்ச்லைட்’ படத்தின் இயக்குனர் அப்துல் மஜித் சொன்னார்.

புதுமுகங்கள் உதயா, சிவசக்தி, தினேஷ், இயக்குனர் வெங்கடேஷ், ரித்விகா உட்பட பலர் நடிக்கும் படம், ’டார்ச்லைட்’. இதை அப்துல் மஜித் இயக்குகிறார். 
படம் பற்றி அவர் கூறும்போது, ‘இது பாலியல் தொழிலாளியை பற்றிய கதையை கொண்ட படம். பாலியல் தொழிலாளியாக நடிக்க பல நடிகைகள் மறுத்துவிட்டனர். பிறகு நடிகை சதா சம்மதித்தார். ரித்விகாவும் அந்த கேரக்டரில்தான் நடித்துள்ளார். வழக்கமாக படங்களில் காட்டியிருக்கிற பாலியல் தொழிலாளிகளின் கதையாக இந்தப் படம் இருக்காது. அவர்கள் ஏன் இந்த தொழிலுக்கு தள்ளப்பட்டார்கள், எப்படி தள்ளப்படுகிறார்கள் என்பதை சொல்லும் படமாக இருக்கும். அவர்களின் மற்றொரு பக்கத்தை சொல்வதாகவும் இருக்கும். இதற்காக சில பாலியல் தொழிலாளிகளை சந்தித்து அவர்கள் கதைகளை கேட்டு இதில் சேர்த்துள்ளேன். தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்துவருகிறது. டிசம்பரில் படம் ரிலீஸ் ஆகும்’ என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com