\
பாடகராகும் சச்சின் டெண்டுல்கர்?

பாடகராகும் சச்சின் டெண்டுல்கர்?

பாடகராகும் சச்சின் டெண்டுல்கர்?
Published on

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மைக் பிடித்திருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. அந்த புகைப்படத்தில் சச்சினுடன் பிரபல பாலிவுட் பாடகர் சோனு நிகாமும் பேட்டை கையில் வைத்து நின்று கொண்டிருந்தார். இதையடுத்து, சச்சின் சொனு நிகம் இருவரும் இணைந்து பாடவுள்ளனர் என்ற தகவலும் வெளியாகியது.

இருவரும் திரும்பி நிற்கும் புகைப்படத்தில், சச்சின் மைக்கையும் சொனு நிகாம் பேட்டையும் பிடித்தவாறு இருந்தனர். இந்த புகைப்படத்தை சச்சினும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். சச்சினின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் மே மாதம் 26-ம் தேதி வெளியாகிறது. இதற்காக எடுக்கப்பட்ட இசை வீடியோவில் இருந்து இந்த படம் வெளியாகியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com