சச்சின் படம் முதல் நாளில் ரூ.9 கோடி வசூல்

சச்சின் படம் முதல் நாளில் ரூ.9 கோடி வசூல்

சச்சின் படம் முதல் நாளில் ரூ.9 கோடி வசூல்
Published on

இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு 'Sachin: A Billion Dreams' என்ற பெயரில் நேற்று இந்தியா முழுவதும் உள்ள 2400 திரையரங்குகளிலும், வெளிநாடுகளில் 400 திரையரங்குகளிலும் வெளியானது. ஹிந்தி, மராட்டி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம்  உள்ளிட்ட மொழிகளில் வெளியான இந்த படத்திற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 
இந்நிலையில், 'Sachin : A Billion Dreams' படம் முதல் நாளான நேற்று இந்தியா முழுவதும் 8.40 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. 

முன்னதாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டது. இந்த படம் தனது முதல் நாளில் சுமார் 21 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com