பிரபாஸின் ’சாஹோ’ ரிலீஸ் தேதி மாற்றம்!

பிரபாஸின் ’சாஹோ’ ரிலீஸ் தேதி மாற்றம்!
பிரபாஸின் ’சாஹோ’ ரிலீஸ் தேதி மாற்றம்!

பிரபாஸ் நடிக்கும் ’சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.

பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் பிரமாண்டமான ஆக்‌ஷன் படம், ’சாஹோ’. அவர் ஜோடியாக இந்தி நடிகை ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். அருண் விஜய், நீல் நிதின் முகேஷ் வில்லன்களாக நடிக்கின்றனர். மந்திரா பேடி, ஜாக்கி ஷெராப், ஜாக்குலின் பெர்ணான்டஸ் உட்பட பலர் நடிக்கின்றனர். மதி ஒளிப்பதிவு செய்கிறார். சுஜித் இயக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் உருவாகிறது.

இந்தப் படத்துக்காக ரூ.70 கோடி செலவில் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக, படக்குழு தெரிவித்துள்ளது. அந்த சண்டைக் காட்சி, அபுதாபியில் பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது. சுமார் 60 நாட்கள் நடந்த இந்த சண்டைக் காட்சியை, ’டை ஹார்ட்’, ’டிரான்ஸ் பார்மர்ஸ்’ உட்பட பல ஹாலிவுட் படங்களில் பணியாற்றியள சண்டை இயக்குனர் கென்னி பேட்ஸ் அமைத்துள்ளார். இந்திய சினிமாவில் இதுவரை இடம்பெறாத வகையில் இந்த சண்டைக் காட்சி இருக்கும் என்று படக்குழுக் கூறியுள்ளது. அனிருத் குரலில், சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ‘காதல் சைக்கோ’ என்ற பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்தப் படம், ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இப்போது ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளுக்கு மேலும் சில நாட்கள் தேவைப்படுவதால், ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com