\
ரசிகர்களுடன் தியேட்டரில் அமர்ந்து ‘மாநாடு’ பார்த்த எஸ்.ஏ சந்திரசேகர்

ரசிகர்களுடன் தியேட்டரில் அமர்ந்து ‘மாநாடு’ பார்த்த எஸ்.ஏ சந்திரசேகர்

ரசிகர்களுடன் தியேட்டரில் அமர்ந்து ‘மாநாடு’ பார்த்த எஸ்.ஏ சந்திரசேகர்
Published on

சிம்புவின் ‘மாநாடு’ படத்தை ரசிகர்களுடன் தியேட்டருக்குச் சென்று பார்த்து ரசித்துள்ளார் இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர்.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் பல்வேறு தடைகளையும் நெருக்கடிகளையும் கடந்து சிம்புவின் ‘மாநாடு’ வெளியாகியிருக்கிறது. வெற்றிப் படமாக அமைந்துள்ளதாக இதுவரை வெளியான விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர் உள்ளிட்டோர் பலர் நடித்திருக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டிவரும் நிலையில், நடிகர் விஜய்யின் அப்பாவும், இயக்குநருமான எஸ். ஏ சந்திரசேகர் ‘மாநாடு’ படத்தை ரசிகர்களுடன் தியேட்டருக்குச் சென்று பார்த்து ரசித்துள்ளார். அவர், தியேட்டரில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படத்தில், எஸ்.ஏ சந்திரசேகர் அரசியல்வாதியாய் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com