விஜய் வளர்ந்து வருகிறார் என அர்த்தம்: எஸ்.ஏ.சந்திரசேகர்

விஜய் வளர்ந்து வருகிறார் என அர்த்தம்: எஸ்.ஏ.சந்திரசேகர்
விஜய் வளர்ந்து வருகிறார் என அர்த்தம்: எஸ்.ஏ.சந்திரசேகர்

இளம்பெண் சுபஸ்ரீ மரணம் குறித்து அனைவரும் பேசுவதுபோல்தான் விஜய்யும் பேசினார் என அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்

சென்னையில் நடைபெற்ற பிகில் இசைவெளியீட்டு விழாவில் பேசிய விஜய் நிகழ்கால அரசியல் தொடர்பாக பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார். யாரை எங்க உட்கார வைக்கணுமோ அவரை அங்க உட்கார வைத்தீங்கன்னா எல்லாம் சரியாக இருக்கும். அரசியலில் புகுந்து விளையாடுங்க; ஆனால் விளையாட்டுல அரசியலை கொண்டு வராதீங்க எனத் தெரிவித்த விஜய் சுபஸ்ரீ மரணம் போன்ற விவகாரங்கள் குறித்தும் பேசினார். விஜயின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் விஜய்க்கு ஆதரவுக்காகவும், எதிராகவும் கருத்துகளை தெரிவித்தனர்.

இந்நிலையில் விஜய்யின் மேடைப்பேச்சு குறித்து அவரது தந்தை சந்திரசேகர், இளம்பெண் சுபஸ்ரீ மரணம் குறித்து அனைவரும் பேசுவதுபோல்தான் விஜய்யும் பேசினார், அதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது என தெரிவித்தார். விஜ‌ய்யின் கருத்துக்கள் சர்ச்சையை கிளப்புகிறதே என்ற செய்தியாளர் கேள்விக்கு, காய்த்த மரமே கல்லடிபடும். அவர் வளர்ந்து வருகிறார் என்று அர்த்தம் என எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com