\
எஸ்.எஸ்.ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர்- மேக்கிங் வீடியோவோடு ரிலீஸ் தேதி வெளியானது

எஸ்.எஸ்.ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர்- மேக்கிங் வீடியோவோடு ரிலீஸ் தேதி வெளியானது

எஸ்.எஸ்.ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர்- மேக்கிங் வீடியோவோடு ரிலீஸ் தேதி வெளியானது
Published on

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் அக்டோபர் 13-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

பாகுபலி இரு பாக திரைப்படங்களை தொடர்ந்து எஸ்எஸ் ராஜமவுலி ஆர்.ஆர்.ஆர் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில், ஆந்திர மாநிலத்தில் வாழ்ந்த அல்லூரி சீதாராமராஜு, கொமரம் பீம் ஆகிய இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதையை கற்பனையாக எழுதி படமாக்கியிருக்கிறார். படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நாயகர்களாக நடிக்கின்றனர். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் அக்டோபர் 13-ஆம் தேதி வெளியாகும் என்று சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தனர். ஆனால் அந்த அறிவிப்பிற்கு பிறகு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. அதேபோல் திரையரங்குகளும் இன்னும் திறக்கப்படவில்லை.  இதனால் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் திட்டமிட்ட தேதியில் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ள படக்குழு, அதில் அக்டோபர் 13ஆம் தேதி இந்தப்படம் வெளியாகும் என்பதையும் குறிப்பிட்டுள்ளனர். 

இதனால் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் நிச்சயம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று உறுதியாகியுள்ளது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் இந்த படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com