பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடம்

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடம்

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடம்
Published on

கொரோனா பாதிப்புக்குள்ளான பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிரபல பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். இதுகுறித்து அண்மையில் வீடியோ வெளியிட்டிருந்த பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் “எனக்கு சளி, காய்ச்சல் தொந்தரவு இருந்தது. மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டேன். அதில் மிகவும் குறைந்த அளவில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் மருத்துவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தினர். ஆனால் நான் மருத்துவமனையிலேயே அனுமதி ஆகியுள்ளேன். சளி, காய்ச்சலை தவிர மற்றபடி நான் நன்றாக உள்ளேன். நான் ஓய்வு எடுப்பதால் நிறைய கால்கள் எடுக்கமுடியவில்லை. நான் நலமாக இருக்கிறேன். உங்களின் அன்புக்கு நன்றி” எனத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளது என தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கொரோனா பாதிப்புக்குள்ளான பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், அவர் கவலைக்கிடமான நிலையில் ஐசியு பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com