காக்கா முட்டை பட இயக்குநர் மணிகண்டன் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை; பீரோவை உடைத்து பணம், நகை கொள்ளை!

தேசிய விருது பெற்ற காக்கா முட்டை படத்தின் இயக்குநர் மணிகண்டனின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், பீரோவை உடைத்து 1 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் தங்க நகைகளை திருடிச்சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மணிகண்டன்
இயக்குநர் மணிகண்டன்புதியதலைமுறை

காக்கா முட்டை மற்றும் கடைசி விவசாயி போன்ற தேசிய விருது பெற்ற படங்களை இயக்கியவர் திரைப்பட இயக்குநர் மணிகண்டன். இவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் எழில் நகரில் வசித்து வருகிறார். இதற்கிடையே, பூட்டியிருந்த மணிகண்டனின் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், பீரோவை உடைத்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

பிரோவில் இருந்த சுமார் 1 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 5 சவரன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மணிகண்டன் தற்போதைக்கு சென்னையில் இருக்கும் நிலையில், உசிலம்பட்டியில் இருக்கும் வீட்டிற்கு நேரில் சென்று ஆய்வு செய்தால் மட்டுமே, எவ்வளவு பணம், நகை திருடு போயுள்ளது என்பது தெரியவரும் என்று கூறப்படுகிறது. சம்பவம் குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், நேரில் சென்ற உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசார் ஆய்வு செய்து தொடர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இயக்குநர் மணிகண்டன்
"கொள்கையும் பிடித்தால்.. விஜய்யின் கட்சி பாடலை ரெடி பண்ண தயார்" - சந்தோஷ் நாராயணன் ஓபன் டாக்!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com