\
'பாக்ஸ் ஆபிஸில்' திணறும் அஜய் தேவ்கனின் 'ரன்வே 34' -தொடர்ந்து மாஸ் காட்டும் 'கேஜிஎஃப் 2'

'பாக்ஸ் ஆபிஸில்' திணறும் அஜய் தேவ்கனின் 'ரன்வே 34' -தொடர்ந்து மாஸ் காட்டும் 'கேஜிஎஃப் 2'

'பாக்ஸ் ஆபிஸில்' திணறும் அஜய் தேவ்கனின் 'ரன்வே 34' -தொடர்ந்து மாஸ் காட்டும் 'கேஜிஎஃப் 2'
Published on

'கேஜிஎஃப் 2' படத்தின் வெறித்தனமான வசூல் வேட்டையால், அஜய் தேவ்கனின் 'ரன்வே 34' திரைப்படம் பாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய அடி வாங்கியுள்ளது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பலர் நடித்த 'கேஜிஎப் 2' திரைப்படம் கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது. படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.100 கோடி வசூல் செய்த இந்தப் படம், வெளியான 2 வாரங்களில் உலக அளவில் 1,000 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி சாதனைப் படைத்து வருகிறது.

இதனிடையே அஜய் தேவ்கன் மற்றும் அமிதாப் பச்சன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'ரன்வே 34' திரைப்படத்தால், 'கேஜிஎப் 2' படத்தைப் பார்க்க வரும் ரசிகர்கள் எண்ணிக்கையும் குறையும் எனவும் இப்படத்தின் வசூல் குறையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 'ரன்வே 34' படத்தின் வரவேற்பு சுமாராக இருந்ததால் அது 'கேஜிஎப் 2' படத்தை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. 'கேஜிஎப் 2' படத்தைப் பார்க்கவே ரசிகர்கள் ஆர்வம் காட்டி உள்ளார்கள்.

இதனால் 'ரன்வே 34' படத்தின் வசூல் 40 சதவீதம் குறைந்துள்ளது. 6 நாளில் வெறும் ரூ.21 கோடி வசூல் மட்டுமே பெற்றுள்ளது. 'கேஜிஎஃப் 2' படத்தின் வசூல் வேட்டையை பார்த்து இந்தி திரையலகமே மிரண்டு போய் உள்ளது.

இதையும் படிக்கலாம்: இதுவும் ’Pan-India’ திரைப்படங்கள்தான்..பாலிவுட்டை தாண்டி தெறிக்கவிடும் தென்னிந்திய சினிமா!


logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com