\
‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’ தயாரிப்பாளருக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கும் மோதலா?

‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’ தயாரிப்பாளருக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கும் மோதலா?

‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’ தயாரிப்பாளருக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கும் மோதலா?
Published on

 
காதலர் தினத்தை முன்னிட்டு ரசிகர்களால் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’ திரைப்படம் வெளியானது. கிராந்தி மாதவ் இயக்கிய இப்படத்தில் தேவரகொண்டா உடன் ராஷிகண்ணா, கேத்ரின் தெரசா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் இசபெல்லி லியட் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர்.

ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்ற ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’ திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வியடைந்ததாகவே கூறப்படுகிறது. படத்தின் நீளம், திரைக்கதையின் பலவீனம், அர்ஜூன் ரெட்டியை நினைவுப்படுத்தும் காட்சிகள் என படத்தில் அதிகப்படியான குறைகள் உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் படத்தின் கதையில் விஜய் தேவரகொண்டா தலையிட்டு சில காட்சிகளை மாத்தியதாக தகவல்கள் பரவின. அதேபோல் படத்திற்கு ரூ.10 கோடியை விஜய தேவரகொண்டா சம்பளமாக பெற்றதாகவும், சம்பள பாக்கிக்காக தன்னுடைய ரூ.2 கோடி மதிப்புள்ள வீட்டையும் எழுதிக் கொடுத்ததாகவும் தயாரிப்பாளர் கூறியதாக செய்திகள் வெளியாகின.

எனவே படத்தின் தோல்வியால் தன்னுடைய வீட்டை விஜய் தேவரகொண்டா திருப்பித்தர வேண்டுமென்று தயாரிப்பாளர் கேட்டதாகவும் தகவல்கள் பரவின. ஆனால் இணையத்தில் பரவும் இந்த தகவலை தெலுங்கு திரையுலகம் முற்றிலும் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. தயாரிப்பாளருக்கும், விஜய் தேவரகொண்டாவுக்கும் இடையே எந்த பிரச்னையும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com