\
I use to mock ADs for fun says actor Arjun
ArjunBlast

மகளின் திருமண வாழ்க்கை குறித்து வதந்தி... ஆக்ஷன் கிங் அர்ஜூன் எச்சரிக்கை

திருமண வாழ்க்கை குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை: அர்ஜுன்
Published on: 

செய்தியாளர் - M.மீரா

நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா குறித்து சமூக வலைதளங்களிலும் சில ஊடகங்களிலும் ஆதாரமற்ற தகவல்கள் பரவி வரும் நிலையில், இதற்கு எதிராக அர்ஜுன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை காதலித்த ஐஸ்வர்யா, அவரைத் திருமணம் செய்துகொண்டார். அண்மையில் அர்ஜுனின் இரண்டாவது மகள் அன்ஜனாவின் திருமணம் நடைபெற்றது. இதில் ஐஸ்வர்யா மட்டும் கலந்துகொண்ட நிலையில், அவரது கணவர் உமாபதி பங்கேற்கவில்லை. இதையடுத்து இருவரது திருமண வாழ்க்கை குறித்து இணையத்தில் பல்வேறு வதந்திகள் பரவின.

Arjun's daughter Aiswarya
Arjun's daughter AiswaryaInstagram

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அர்ஜுன், தனது மகளின் தனிப்பட்ட வாழ்க்கையை மதித்து இதுவரை அமைதியாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஆதாரமின்றி ஐஸ்வர்யாவின் குணம் மற்றும் வாழ்க்கை குறித்து அவதூறு பரப்புவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை என்றும், தொடர்ந்து அவதூறு பரப்பினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

I use to mock ADs for fun says actor Arjun
’என்னுடைய நிதானம், அமைதியின் ரகசியம் இதுதான்..’ சாய் பல்லவி பகிர்ந்த விசயம்!