கூலி படத்தில் சிவகார்த்திகேயன்..? லோகேஷ் எடுத்த திடீர் முடிவு.. ஆர்வத்தோடு காத்திருக்கும் ரசிகர்கள்!
ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ள கூலி திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.. கடைசியில் நடந்த டிவிஸ்ட் தான் எஸ்கே ரசிகர்களை அப்செட் ஆக்கியுள்ளது.
கூலியில் சிவகார்த்திகேயன்?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வரும் 14-ஆம் தேதி நாடு முழுவதும் வெளியாகவுள்ளது. அதே நாளில் வார் -2 திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் திரையுலகின் முன்னணி நடிகர்களான நாகார்ஜுன், அமீர்கான், சத்யராஜ், உபேந்திரா, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனால் இப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கினறனர். நேற்று ஒரே நாளில் இந்தியா முழுவதும் 14 ஆயிரம் கோடி டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கோடிக்கணக்கில் உருவான படம் என்பதால் 1000 கோடிக்கு மேல் வசூலாகவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், கூலி திரைப்படம் தொடர்பான போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.. அந்த போஸ்டரில் அதில் ‘கூலி’ படத்தில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைப்பார்த்த ரசிகர்கள் பலரும் இணையத்தில் பகிர்ந்து வந்தனர். அதே சமயம் இது உண்மையா என ரசிகர்கள் சிலர் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
பொதுவாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் வெளியாகும் சமயங்களில் கேமியோ ரோல்களில் முன்னணி நடிகர்கள் நடிப்பதாக தகவல்கள் இணையத்தில் பரவி ரசிகர்களை உற்சாகமடைய வைக்கும். அந்த வகையில் தான் தற்போது கூலி திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களை உட்சபடச்ச எதிர்பார்ப்பில் ஆழ்த்தியது.
ஆனால் தற்போது, கூலி படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவில்லை என்ற தகவல் தான் எஸ்கே ரசிகர்களை அப்செட்டில் ஆழ்த்தியுள்ளது.