சினிமா
பொது இடத்தில் புகைப்பிடித்த ஹீரோவுக்கு அபராதம்!
பொது இடத்தில் புகைப்பிடித்த ஹீரோவுக்கு அபராதம்!
பொது இடத்தில் புகைப்பிடித்த தெலுங்கு ஹீரோ ராமுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
பிரபல தெலுங்கு நடிகர் ராம். இவர் தமிழில், கருணாகரன் இயக்கிய ’ஏனென்றால்... காதல் என்பேன்’ என்ற படத்தில் நடித்தி ருந்தார். இப்போது ’ஸ்மார்ட் சங்கர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். புரி ஜெகநாத் இயக்கும் இந்தப் படத்தில் அவர் ஜோடியாக நிதி அகரவால் நடிக்கிறார்.
இந்தப் படத்தின் ஷூட்டிங், ஐதராபாத் அருகே உள்ள வரலாற்று சிறப்புமிக்க சார்மினார் அருகே நடந்தது. படத்தின் ஷூட்டிங்கிற்காக ராம், புகைப்பிடித்தபடி நடித்தார். இதையடுத்து, பொது இடத்தில் சிகரெட் புகைத்ததற்காகக் கூறி, அவருக்கு சார்மினார் போலீசார் ரூ.200 அபராதம் விதித்தனர். படப்பிடிப்புக்குழு அந்த அபராதத்தைக் கட்டியது.

