ரஜினியின் 2.0 ஒட்டுமொத்த வசூலை பத்தே நாட்களில் முந்திச் சென்றது ஆர்.ஆர்.ஆர்.!

ரஜினியின் 2.0 ஒட்டுமொத்த வசூலை பத்தே நாட்களில் முந்திச் சென்றது ஆர்.ஆர்.ஆர்.!
ரஜினியின் 2.0 ஒட்டுமொத்த வசூலை பத்தே நாட்களில் முந்திச் சென்றது ஆர்.ஆர்.ஆர்.!

ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0வின் ஒட்டுமொத்த வசூலை 10 நாட்களில் முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர், பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை ஒன்றன் பின் ஒன்றாக தகர்த்து வருகிறது. ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் ஆகிய இரு பெரும் நட்சத்திரங்கள் இப்படத்தில் கதாநாயகர்களாக நடித்திருந்தனர். ரூ.450 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. வெளியான நாள் முதல் பாக்ஸ் ஆபிஸில் கங்குபாய் கத்தியவாடி, தி காஷ்மீர் ஃபைல்ஸ் மற்றும் பாகுபலி (இந்தி) ஆகிய படங்களின் வசூலை முந்தி சாதனை புரிந்தது.

இதையடுத்து ஷங்கர் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் “2.0” திரைப்படத்தின் ஒட்டுமொத்த வசூலையும் ஆர்.ஆர்.ஆர். முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ஆர்.ஆர்.ஆர். பாக்ஸ் ஆபிஸில் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் இப்படம் உலகம் முழுவதும் ரூ.819.06 கோடி வசூல் செய்து இன்னும் வசூலில் சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் ஆர்ஆர்ஆர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0வின் ஒட்டுமொத்த வசூலை வெறும் 10 நாட்களில் முறியடித்துள்ளது.

ஆர்ஆர்ஆர் இப்போது அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்களில் ஆறாவது இடத்தில் உள்ளது. தங்கல், பாகுபலி: தி கன்க்ளூசன், பஜ்ரங்கி பைஜான், சீக்ரெட் சூப்பர் ஸ்டார் மற்றும் பிகே ஆகியவை அதிக வசூல் செய்த முதல் 10 இந்தியப் படங்களில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com