ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படம் அக்டோபர் 13-ல் வெளியீடு; அதிகாரபூர்வ அறிவிப்பு!

ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படம் அக்டோபர் 13-ல் வெளியீடு; அதிகாரபூர்வ அறிவிப்பு!

ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படம் அக்டோபர் 13-ல் வெளியீடு; அதிகாரபூர்வ அறிவிப்பு!
Published on

ராஜமெளலி இயக்கத்தில் ஜுனியர் என்.டி.ஆர், ராம் சரண் நடிக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் இந்த வருடம் அக்டோபர் 13-ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு.

மஹதீரா, நான் , பாகுபலி படங்களின் மூலம் தமிழ், தெலுங்கு, இந்தி பட ரசிகர்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் இயக்குநர் ராஜமெளலி. இவரது இயக்கத்தில் வெளியான பாகுபலி இந்தியா மட்டுமல்லாது உலகளவில் வசூல் சாதனை செய்தது. உலக இயக்குநர்களுக்கே தொழில்நுட்பத்தில் சவாலாய் அமைந்தது பாகுபலி. இவரது அடுத்தப்படமானஆர்ஆர்ஆர்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரணுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார்கள்.

ஏற்கனவே, ராஜமெளலி மூன்று படங்களில் ஜூனியர் என்.டி.ஆருடன் பணியாற்றியுள்ளார். ராம் சரணுடன் மஹதீரா படத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தில் பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கானும், நடிகை ஆலியா பட், சமுத்திரக்கனி உள்ளிடோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இதன் டீசரும் வெளியாகி வரவேற்பை குவித்தது. இந்நிலையில், ‘ஆர்ஆர்ஆர்’ படம் வரும் அக்டோபர் 13-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருப்பதால் பெரும் எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com