சினிமாவில் 15 ஆண்டுகள்: அதகளப்படுத்திய ‘ஆர்ஆர்ஆர்’ வெற்றி - தியேட்டர் விசிட்டில் ராம் சரண்

சினிமாவில் 15 ஆண்டுகள்: அதகளப்படுத்திய ‘ஆர்ஆர்ஆர்’ வெற்றி - தியேட்டர் விசிட்டில் ராம் சரண்
சினிமாவில் 15 ஆண்டுகள்: அதகளப்படுத்திய ‘ஆர்ஆர்ஆர்’ வெற்றி - தியேட்டர் விசிட்டில் ராம் சரண்

மும்பை தியேட்டருக்கு சர்ப்ரைஸ் விசிட் செய்து ‘ஆர்ஆர்ஆர்’ படத்தைப் பார்த்துள்ளார் நடிகர் ராம் சரண்.

ராம் சரணின் சினிமா வாழ்க்கையில் வெளியான ஒரே வாரத்தில் வசூலில் ரூ. 1000 கோடியை நெருங்கும் முதல் படம் என்றப் பெருமையை ‘ஆர்ஆர்ஆர்’ பெற்றுள்ளது. ‘மகதீரா’ வெற்றிக்குப்பிறகு மீண்டும் ராஜமெளலியுடன் ராம் சரண் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இணைந்தார். நடிகர்கள் ஆண்டொன்றுக்கு ஒவ்வொரு படங்களாக ரிலீஸ் செய்துகொண்டிருக்க ’ஆர்ஆர்ஆர்’ படத்திற்காக மூன்று ஆண்டுகள் உழைப்பை கொட்டியுள்ளார் ராம் சரண். அதற்குப் பலனாய் ‘ஆர்ஆர்ஆர்’ பட வெளியீட்டின்போதும் அதற்குப் பின்னும் வெளியான அத்தனைப் படங்களையும் பின்னுக்குத்தள்ளி ஃபாக்ஸ் ஆஃபிஸ் ரன்னிங்கில் தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறது ‘ஆர்ஆர்ஆர்’.

ஆந்திராவில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லுரி சீதாராமராஜூ, கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு ’ஆர்ஆர்ஆர்’ படத்தை உருவாக்கியுள்ளார் ராஜமெளலி. 1920 களில் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் அல்லூரி சீதாராமராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும், கொமரம் பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆரும் நடிப்பில் கவனம் ஈர்த்திருந்தனர். அஜய் தேவ்கான், ஆலியா பட், உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்துள்ளார். ராமராஜு, பீம் கதாபாத்திரத்தில் படத்தில் வரும் பாடலைப்போலவே ‘நாட்டு நாட்டு’ என்று போட்டிப் போட்டுகொண்டு நடித்து பாராட்டுக்களைக் குவித்து வருகின்றனர் ராம் சரணும் ஜூனியர் என்டிஆரும். ஏற்கனவே, ராம் சரண் ரசிகர்களுக்கு உருக்கமுடன் அறிக்கை வெளியிட்டு நன்றி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,நேற்றிரவு மும்பை பாந்த்ராவில் உள்ள கெய்டே தியேட்டருக்கு சர்ப்ரைஸ் விசிட் செய்து அரைமணி நேரம் ரசிகர்களுடன் அமர்ந்து ‘ஆர்ஆர்ஆர்’ பார்த்து ரசித்துள்ளார் ராம் சரண். ஏற்கனவே, ராம் சரணின் மனைவியும் அப்போலோ மருத்துவமனை பிரதாப் ரெட்டியின் பேத்தியுமானா உபாசனா ’ஆர்ஆர்ஆர்’ படத்தை ரசிகர்களுடன் தியேட்டரில் பார்த்து குதூகலித்த வீடியோ வைரலானது. தர்போது, ராம் சரணும் கருப்பு நிற உடையில் ரசிகர்களை தியேட்டரில் சந்தித்த கவனம் ஈர்க்கும் வீடியோக்களும் புகைப்படங்களும் வைரலாகியுள்ளன. இந்தியில் மட்டுமே ‘ஆர்ஆர்ஆர்’ 200 கோடி வசூலைக் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஷங்கர் இயக்கத்தில் ‘ராம் சரண் 15’ படம் ராம் சரண் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com