\
’மாநாடு’ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் புதிய படம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

’மாநாடு’ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் புதிய படம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

’மாநாடு’ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் புதிய படம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Published on

வெங்கட் பிரபுவின் அடுத்தப்பட அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

சிலம்பரசன் – கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெங்கட் பிரபு தற்போது ’மாநாடு’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். அரசியல் கதைக்களத்தைக் கொண்ட, இப்படத்தில் சிம்பு அப்துல் மாலிக் என்ற இஸ்லாமியராக நடித்துள்ளார். ரம்ஜானையொட்டி இப்படத்தின் முதல் பாடல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால்,கடந்த 10 ஆம் தேதி வெங்கட் பிரபுவின் அம்மா மணிமேகலை உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதனால், ‘மாநாடு’ படத்தின் முதல் பாடல் வெளியீட்டை படக்குழு தள்ளி வைத்துள்ளது.

இந்நிலையில், தற்போது, தனது அடுத்தப் படத்தின் அறிவிப்பை அதிகாரபூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார் வெங்கட் பிரபு. இனிமேல்தான் படத்தில் நடிக்கும் நடிகைகள், நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. இது வெங்கட் பிரபுவின் 10 வது திரைப்படமாகும்.

இப்படத்தை, பிரபல விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ராக்ஃபோர்ட் என்டர்டைன்மெண்ட்  முருகானந்தம் தயாரிக்கிறார். இவர் ஏற்கனவே, அதர்வா முரளியின் ‘குருதி ஆட்டம்’, மிஷ்கினின் ’பிசாசு 2 ‘ படங்களை தயாரித்து வருகிறார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com