கோவாவை விட மெரினா பெஸ்ட் பீச்: சொல்கிறது ரோஜெல்லி-கெய்த் ஜோடி!

கோவாவை விட மெரினா பெஸ்ட் பீச்: சொல்கிறது ரோஜெல்லி-கெய்த் ஜோடி!
கோவாவை விட மெரினா பெஸ்ட் பீச்: சொல்கிறது ரோஜெல்லி-கெய்த் ஜோடி!

ஊடகப் பிரபலங்களான ரோஜெல்லி ராவ் மற்றும் கெய்த் செகீரா ஜோடியை புகழ்ந்துள்ளனர். 

ரோஜெல்லி கடந்த 2012ஆம் ஆண்டு இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் சென்னையில் பிறந்து, சென்னையிலேயே உள்ள தனியார் கல்லூரியில் படித்தவர். தற்போது இந்திய ஆங்கில ஊடகங்களில் ஒரு பிரபலமான தொகுப்பாளராக வளம் வருகிறார். சில டிவி நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்றுள்ளார். இவரை கெய்த் செகீரா என்ற நடிகர் நிச்சயம் செய்துள்ளார். டெல்லியில் பிறந்த கெய்த்தும் பிரபலமான மாடல் ஆவார். 

கடந்து சில ஆண்டுகளாக மும்பையில் வசித்து வரும் ரோஜெல்லி, தற்போது தனது இணையுடன் சென்னையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ரோஜெல்லிக்கு சென்னைப் பழக்கப்பட்ட இடம் என்றாலும், கெய்த்துக்கு புதுமையான இடமாகும். இருவரும் சென்னையில் பெசண்ட் நகர் கடற்கரைக்கு சென்று பொழுதுபோக்கினர். அப்போது சுண்டல், பஜ்ஜி மற்றும் கடல் சார்ந்த உணவுகளை சுவைத்தனர். துப்பாக்கியால் பலூனை சுடும் விளையாட்டுகளில் ஈடுபட்டு மகிழ்ந்தனர்.

சென்னை குறித்து பேசிய கெய்த், சென்னையில் அனைத்து வித உணவுகளும் குறைந்த விலையில் கிடைப்பதாகவும், கோவாவை விட சென்னை சிறந்த பீச் என்றும் கூறியுள்ளார். அத்துடன் தங்கள் திருமணத்தை சென்னையில் நடத்தும் எண்ணம் இருப்பதாகவும் தெரிவித்தார். ரோஜெல்லி கூறும் போது, சென்னை மிகவும் மிஸ் பண்ணுவதாக தெரிவித்தார். அத்துடன் தனது காதலரும் சென்னை வந்து தமிழை கற்று வருவதாகவும் கூறினார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com