\
கலக்கத்தில் இருந்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் : உற்சாகமூட்டிய ரோபோ சங்கர்

கலக்கத்தில் இருந்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் : உற்சாகமூட்டிய ரோபோ சங்கர்

கலக்கத்தில் இருந்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் : உற்சாகமூட்டிய ரோபோ சங்கர்
Published on

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மன அழுத்தத்தை போக்க திரைப்பட நடிகர் ரோபோ சங்கர் பலகுரலில் பேசி அவர்களை சிரிக்க வைத்து மகிழ்வித்தார்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டுக்கோட்டை பெருமாள் கோயில் புதுரோட்டில் உள்ள புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கொரோனா வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திரைப்பட நடிகர் ரோபோ சங்கர் மற்றும் திண்டுக்கல் செந்தில் ஆகியோர், ஆட்சியரின் அனுமதி‌பெற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்‌ இருக்கும் வார்டுக்குச் சென்றனர்.

பின்னர் மன அழுத்தத்தை போக்கும் வகையில் அவர்களுடன் சிரித்து பேசினர். குறிப்பாக ரோபோ சங்கர் பல குரல்களில் நகைச்சுவையாக பேசி கலகலப்பை ஏற்படுத்தினார். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் சிரித்து மகிழ்ந்தனர்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com