தனுஷ்சுக்கு உதவப் போகிறாராம் ரித்து வர்மா

தனுஷ்சுக்கு உதவப் போகிறாராம் ரித்து வர்மா
தனுஷ்சுக்கு உதவப் போகிறாராம் ரித்து வர்மா

தெலுங்கில் வலம்வரும் ரித்து வர்மா விஐபி- 2 படத்தில் தனுஷ்சுக்கு உதவப் போகிறாராம்

காதல் நினைவுகளை துள்ளலாக அப்படியே திரையில் பதிவு செய்யும் பிரபல இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ரித்து வர்மா நடிக்கிறார். ஆனால் துருவ நட்சத்திரத்தில் பளிச்சிடும் முன்பே திடீரென்று விஐபி- 2 ட்ரைலரில் முகம்காட்டி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விட்டார் ரித்து.

சமீபத்தில் படக்குழுவால் வெளியிடப்பட்ட விஐபி- 2 ஃபர்ஸ்ட் லுக், டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் நெகட்டிவ் ரோலில் பாலிவுட் நடிகை கஜோல் நடித்திருக்கிறார். தனுஷ்- கஜோல் மோதலே படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்கிறார்கள். படத்தில் தனுஷ் வேலையின்றி தவிக்கும் போது அவருக்கு உதவி செய்பவராக முகம் காட்டுகிறாராம் ரித்து. அமலாபால்,  சமுத்திரகனி, விவேக் என முதல்பாகத்தில் நடித்தவர்களே இந்தப் படத்திலும் நடித்திருந்தாலும் கஜோல், ரித்துவின் புது வரவு படத்தின் எதிர்ப்பார்பை மேலும் அதிகரித்துள்ளது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com