தியேட்டரில் விசித்திரமாக நடந்துகொண்ட பெண் - பாதியிலேயே நிறுத்தப்பட்ட கன்னட திரைப்படம்

தியேட்டரில் விசித்திரமாக நடந்துகொண்ட பெண் - பாதியிலேயே நிறுத்தப்பட்ட கன்னட திரைப்படம்

தியேட்டரில் விசித்திரமாக நடந்துகொண்ட பெண் - பாதியிலேயே நிறுத்தப்பட்ட கன்னட திரைப்படம்
Published on

மங்களூரில் உள்ள திரையரங்கில் 'காந்தாரா' படம் ஓடிக்கொண்டிருக்கையில் இடையில் பெண் ஒருவர் விசித்திரமாக நடந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

கன்னடத்தில் இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியான 'காந்தாரா' திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வசூல் ரீதியாகவும் 'காந்தாரா' படத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். பல்வேறு திரையுலக பிரபலங்களும் படத்தைப் பார்த்துவிட்டுப் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மங்களூர் பிவிஆர் மாலில் 'காந்தாரா' படம் ஓடிக்கொண்டிருக்கையில் இடையில் பெண் ஒருவர் விசித்திரமாக நடந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு பெண் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று உரக்கக் கத்தி கூச்சல் போடுகிறார். அந்த பெண் விடாமல் கத்தி கூச்சல் போடவே, ஒரு அரை மணி நேரத்துக்கு படம் திரையிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து அந்த பெண் சுயநினைவுக்கு திரும்பியதும் மீண்டும் படம் திரையிடப்பட்டது.

'காந்தாரா' திரைப்படத்தின் கதைக்கரு என்பது ஒரு நிலத்திற்கான போராட்டம் சம்பந்தப்பட்டது. இந்தப் போராட்டத்தை தொன்மம், அமானுஷ்யம், ஆக்ஷன், நாட்டுப்புற கதைகள் போன்றவற்றை எல்லாம் கலந்து ஒரு மகத்தான திரைப்படத்தைத் தந்திருக்கிறார் ரிஷப் ஷெட்டி. இப்படத்தில் சப்தமி கவுடா, கிஷோர், அச்யுத் குமார், வினய் பிடப்பா, பிரமோத் ஷெட்டி, உக்ரம் ரவி, பிரகாஷ் துமிநாட் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர்.

இதையும் படிக்க: 'காஃபி வித் காதல்' படம் தள்ளிப்போக 'பொன்னியின் செல்வன்' தான் காரணமா? - குஷ்புவின் பதில்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com