ஷகிலாவை ஏன் சில்க் ஸ்மிதாவுடன் ஒப்பிடுகிறர்கள்? இந்தி நடிகை கேள்வி!

ஷகிலாவை ஏன் சில்க் ஸ்மிதாவுடன் ஒப்பிடுகிறர்கள்? இந்தி நடிகை கேள்வி!
ஷகிலாவை ஏன் சில்க் ஸ்மிதாவுடன் ஒப்பிடுகிறர்கள்? இந்தி நடிகை கேள்வி!

கவர்ச்சி நடிகை ஷகிலாவை, சில்க் ஸ்மிதாவுடன் ஏன் ஒப்பிட வேண்டும் என்று இந்தி நடிகை ரிச்சா சதா கேள்வி எழுப்பியுள்ளார். 

கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு இந்தியில் சினிமாவாக உருவாகிறது. ஷகிலா, தனது 16 வயதில் மலை யாள சினிமாவில் அறிமுகமானவர். பிறகு தமிழ், தெலுங்கு, கன்னட சினிமாக்களில் விரைவிலேயே பிரபலம் அடைந்தார். எந்த டாப் ஹீரோக்களுடன் நடிக்காமல் தனித்து சாதிக்க முயன்று வெற்றி பெற்றவர். மலையாள சினிமாவில் தனி மனு ஷியாக முன்னணி ஹீரோக்களுக்கே சவால் விட்டவர். அவர் நடித்த படங்கள் முன்னணி ஹீரோ படங்களின் வசூலை தாண்டிச் சென்றது. இதனால் கோபமான சில ஹீரோக்கள், ஷகிலா படங்கள் கவர்ச்சியாக இருப்பதால் கேரளாவில் தடை விதிக்க வேண்டும் என்று கூறினர். இதையும் தாண்டி சாதித்தார் ஷகிலா. அவரது வாழ்க்கை வரலாறு இந்தியில் சினிமாவா கிறது. சமீ பத்தில் அவர் மலையாளத்தில் வெளியிட்ட சுயசரிதை புத்தகத்தின் அடிப்படையில் இந்தப் படம் உருவாவதாகத் தெரிகிறது. இந்தி நடிகை ரிச்சா சதா (Richa Chadha) ஷகிலாவாக நடிக்கிறார்.

இதுபற்றி ரிச்சா சதா கூறும்போது, ’ இந்தப் படத்தில் நடிக்கிறேன் என்றதும் என்னையும் வித்யா பாலனையும் ஒப்பிட்டு பேசத் தொடங்கிவிட்டனர். அவருடன் என்னை ஒப்பிடுவது பற்றி எனக்கு ஒன்றும் இல்லை. வித்யா பாலன், சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறான ’டர்ட்டி பிக்சர்’ படத்தில் நடித்திருந்தார். இந்தப்படம் ஹிட்டானது. அதை வைத்து இப்படியான ஒப் பிடல் நடக்கிறது. இது எனக்கு நல்லதுதான். ஆனால், அவர் நடித்தது சில்க் ஸ்மிதா கேரக்டர், நான் நடிப்பது ஷகிலா கேரக்டர்... ஏன் இருவரையும் ஒப்பிட வேண்டும்?’ என்று கேட்டுள்ளார். 

இதை இந்திரஜித் லங்கேஷ் இயக்குகிறார். படத்துக்காக உடல் எடையை அதிகரிக்க இருக்கிறார் ரிச்சா. மலையாள ஆசிரியர் ஒருவரிடம் அந்த மொழியையும் அவர் கற்றுவருகிறார். ஜூனில் ஷூட்டிங் தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com