\
வாட்ஸ் ஆப் உரையாடல்: ரியா மீது போதைப்பொருள் தடுப்புப்பி‌ரிவு வழக்கு !

வாட்ஸ் ஆப் உரையாடல்: ரியா மீது போதைப்பொருள் தடுப்புப்பி‌ரிவு வழக்கு !

வாட்ஸ் ஆப் உரையாடல்: ரியா மீது போதைப்பொருள் தடுப்புப்பி‌ரிவு வழக்கு !
Published on: 

நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலியான நடிகை ரியா மீது, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவருக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புள்ளதா? என்பது குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ள‌து.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் சுஷாந்தின் காதலியான ரியா சக்கரவர்த்தியின் சில வாட்ஸ் ஆப் உரையாடல்கள் குறித்து விசாரணை நடத்துமாறு போதை தடுப்புப் பிரிவு காவல்துறையை அமலாக்கத்துறை கேட்டுக் கொண்டது.

இதையடுத்து விசாரணை நடத்திய போதைப் பொருள் தடுப்பு காவல் துறை, ரியா மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் ரியா, போதைப் பொருள் எடுத்துக் கொள்ளும் பழக்கம் உடையவரா? என்பது பற்றியும் விசாரிக்கப்படும் என போதைப் பொருள் தடுப்பு காவல்துறை தலைவர் ராகேஷ் அஸ்தானா தெரிவித்துள்ளார்.
இதனிடையே ரியா மீது போதைப்பொருள் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்திருப்பது வியப்பளிப்பதாக அவரது வழக்கறிஞர் சதிஷ் மணிஷின்டே தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் ரியா ரத்தப் பரிசோதனைக்கும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com