RGV says Dhurandhar The Revenge will rattle South cinema if it earns
Ranveer Singhweb

‘துரந்தர் 2’ | தென்னிந்திய ஆதிக்கத்தை மாற்றுமா? ராம் கோபால் வர்மா சொல்வது என்ன?

’துரந்தர் 2’ திரைப்படம் ரூ.1,500–2,000 கோடி வசூலைத் தாண்டினால் தென்னிந்திய படங்களின் ஆதிக்கத்தை சீர்குலைக்கும் என்று திரைப்படத் தயாரிப்பாளர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.
Published on

ரன்வீர் சிங் நடிப்பில் ஆதித்யா தர் இயக்கி கடந்த ஆண்டு இறுதியில் வெளியான படம் `துரந்தர்'. இப்படத்தின் இரண்டாம் பாகமான `துரந்தர் தி ரிவென்ஞ்' மார்ச் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ’துரந்தர் 2’ திரைப்படம் ரூ.1,500–2,000 கோடி வசூலைத் தாண்டினால் தென்னிந்திய படங்களின் ஆதிக்கத்தை சீர்குலைக்கும் என்று திரைப்படத் தயாரிப்பாளர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

ரன்வீர் சிங் நடிப்பில் ஆதித்யா தர் இயக்கி கடந்த ஆண்டு இறுதியில் வெளியான படம் `துரந்தர்'. ஸ்பை த்ரில்லர் படமாக உருவான இப்படம் உலகளவில் 1300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகமான `துரந்தர் தி ரிவென்ஞ்' மார்ச் 19ஆம் தேதி வெளியாகும் என முதல் பாகத்தின் இறுதியிலேயே அறிவிக்கப்பட்டது. முதலில் யாஷ் நடித்த டாக்ஸிக்: தி ஃபேரிடேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் படத்துடன் இந்தப் படமும் மோத தயாராக இருந்தது. ஆனால் ஜூன் மாதத்திற்கு யாஷ் படம் தள்ளிப் போனதால், இந்த இரு படங்களுக்கான பாக்ஸ் ஆபிஸ் போர் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், பவன் கல்யாண் நடித்த உஸ்தாத் பகத் சிங் படத்தின் போட்டியை எதிர்கொள்ள தயாராகி இருக்கிறது.

RGV says Dhurandhar The Revenge will rattle South cinema if it earns
Dhurandhar

இந்தப் படத்தில் ஆர்.மாதவன், அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், ராகேஷ் பேடி மற்றும் சாரா அர்ஜுன் உள்ளிட்ட ஒரு குழும நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில், இப்படம் பற்றி பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

RGV says Dhurandhar The Revenge will rattle South cinema if it earns
துரந்தர் பார்ட் 2| அதிரடி ட்ரெய்லர் வெளியீடு.. 4 மணிநேர படம், முதல்நாள் சிறப்புக்காட்சி!

அந்த வகையில், ” ‘’துரந்தர் 2’ திரைப்படம் ரூ.1,500–2,000 கோடி வசூலைத் தாண்டினால் தென்னிந்திய படங்களின் ஆதிக்கத்தை சீர்குலைக்கும் என்று திரைப்படத் தயாரிப்பாளர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “இந்தப் படம் உலகளவில் ரூ.1,500 - 2,000 கோடி வசூலைத் தாண்டினால், தென்னிந்திய சினிமாவின் ஆதிக்கத்தை சீர்குலைக்கும். இந்தத் தொடர்ச்சி பாக்ஸ் ஆபிஸ் போக்குகளை மாற்றியமைக்கும். மேலும் பல தென்னிந்திய அதிரடிப் படங்கள் இன்னும் பழைய பாணி கதை சொல்லல் மற்றும் காட்சியைச் சுற்றியே கட்டமைக்கப்பட்டுள்ளன. ரசிகர்கள், கதாபாத்திரங்களிலும் கதையிலும் நிறைய முதலீடு செய்துள்ளனர். முதல் பகுதியின் போக்கை அவர்கள் பின்பற்றுவார்கள் என்று நான் நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

RGV says Dhurandhar The Revenge will rattle South cinema if it earns
Ranveer Singhweb

முதல் பாகத்தில் ஹம்சா பாத்திரம், ரஹ்மான் தாக்கித் குழுவுக்குள் எப்படி இணைந்தார் என்பது காட்டப்பட்டது. இரண்டாவது பாகத்தில் ஹம்சா (எ) ஐஸ்கிராத் சிங் வாழ்க்கையில் என்ன நடந்தது, லையாரி பகுதி எப்படி ஹம்சா (எ) ஜஸ்கிரத் கைக்கு வருகிறது, ஆப்ரேஷன் துரந்தரின் இறுதி லட்சியம் என்ன என்பதெல்லாம் இந்த பாகத்தில் சொல்லப்பட இருக்கிறது. கடந்த பாகத்தை விட இந்த பாகத்தில் வன்முறை மிக அதிகமாக இருக்கும் என்பது ட்ரெய்லரை பார்க்கும் போதே தெரிகிறது.

RGV says Dhurandhar The Revenge will rattle South cinema if it earns
யஷ் - ரன்வீர் சிங் ரெண்டு பேருக்கு தான் போட்டியே! | Toxic | Dhurandhar: The Revenge

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com